50MP+50MP+12MP Camera போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி 14டி ப்ரோ (Xiaomi 14T Pro) ஸ்மார்ட்போனை உலக சந்தை மற்றும் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. IMDA சான்றிதழ் தளத்தில் 2407FPN8EG என்ற மாடல் நம்பர் உடன் இந்த புதிய சியோமி 14டி ப்ரோ காணப்பட்டது. எனவே வரும் வாரங்களில் இந்த புதிய சியோமி போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஆன்லைனின் கசிந்த இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சியோமி 14டி ப்ரோ அம்சங்கள் (Xiaomi 14T Pro
Specifications): தரமான மீடியாடெக்
டைமன்சிட்டி 9300 பிளஸ் (MediaTek
Dimensity 9300+ SoC) சிப்செட் உடன்
சியோமி 14டி ப்ரோ
ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங்
ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போனுக்கு
வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி டெலிபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள்
ரியர் கேமரா அமைப்புடன் இந்த சியோமி 14டி ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த
ஸ்மாரட்போன் உதவியுடன் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க
முடியும். குறிப்பாக AI இமேஜிங்
தொழில்நுட்பம் கொண்ட Leica கேமரா
சென்சார்கள் இந்த போனில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள்
இதில் உள்ளன
5500எம்ஏஎச் பேட்டரி
வசதியுடன் இந்த அசத்தலான சியோமி 14டி ப்ரோ
ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (120W wired fast charging) வசதியும் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஃபாஸ்ட்
சார்ஜிங் வசதியுடன் சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி இரண்டு வேரியண்ட்களில் சியோமி 14டி ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று
கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ
எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் இந்த சியோமி 14டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இந்த போனின் டிஸ்பிளேவில் உள்ளது. 5ஜி (5G), ப்ளூடூத் (Bluetooth), வைஃபை (Wi-Fi), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போன் ரூ.40,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.