Apple MacBook மீது ரூ.20,000 விலை குறைப்பு.. என்ன மாடல்?

ஆப்பிள் (Apple) நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான விலைக்குறைப்புகள் அறிவிக்கப்படும். அப்போதும் கூட ரூ.1000, ரூ.2000 தான் விலைக்குறைப்புகள் அறிவிக்கப்படும். ஆனால் இந்த முறை, ஒரு ஆப்பிள் தயாரிப்பின் மீது முழுதாக ரூ.20000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 


ஆப்பிள் (Apple) நிறுவனம் எம்3 சிப்செட் உடனான தனது லேட்டஸ்ட் மேக்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்த வேகத்தில், அதன் 13-இன்ச் மேக்புக் ஏர் எம்2 மாடலின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் கூற்றுப்படி, அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர்களில் 2022 மேக்புக் ஏர் மாடல் மீது ரூ.20,000 பிளாட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

 

ஆப்பிளின் இந்த திடீர் விலைக்குறைப்பை தொடர்ந்து இந்த மேக்புக் மாடலின் விலை ரூ.99,900 ஆக குறைந்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த மேக்புக் மாடலின் அசல் விலை ரூ.1,19,900 ஆகும். இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதே மேக்புக் மாடலை ரூ.89,900 க்கும் வாங்க முடியும்.


இந்த சலுகை, ஆப்பிளின் கல்வி சலுகையின்கீழ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதுவும் அப்பிளின் அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர்கள் வழியாக மட்டுமே கிடைக்கும். ஒருவேளை நீங்கள் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள புதிய மேக்புக் மாடலை வாங்க விருப்பினால், எம்3 சிப் உடன் கூடிய 13-இன்ச் மேக்புக் ஏர் மாடலானது ரூ.1,14,900 க்கு வாங்க கிடைக்கிறது. ஆப்பிளின் கல்வி சலுகையின்கீழ் இதே மாடல் ரூ.1,04,900 க்கு வாங்க கிடைக்கும்.

 

முக்கிய அம்சங்களை பொருத்தவரை, மேக்புக் ஏர் எம்2 மாடலில் 1080பி கேமரா உள்ளது. இது போதுமான தரத்திலான கேமரா அனுபவம் கிடைக்கும். மேலும் 2022 மாடலில் ஸ்பீக்கர் கிரில்ஸ் எதுவும் இல்லை. மாறாக ஆப்பிள் நிறுவனம் இரண்டு ட்வீட்டர்கள் மற்றும் இரண்டு வூஃபர்களை கீபோர்டு மற்றும் டிஸ்பிளேவிற்கு இடையே நேர்த்தியான முறையில் பொருத்தப்பட்டுள்ளது. கடைசியாக இதில் டால்பி அட்மோஸ் ஆதரவுடன் சேர்த்து ஸ்பேஷியல் ஆடியோ தொழில்நுட்பத்திற்கான ஆதரவும் உள்ளது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Menu