பட்டய கிளப்பும் கேமரா iQOO Z9 5G மொபைல்

iQOO இந்தியாவில் iQOO Z9 5G மொபைலை அறிமுகப்படுத்தினார். மார்ச் 12 அன்று இந்த மொபைல் போன் வெளியிடப்பட உள்ளது. இந்தச் செய்தியை மரியா தனது ட்விட்டர் பதிவில் அறிவித்தார்.



அதனுடன் இந்த போனைப் பற்றிய சில போட்டோ  மற்றும் கேமரா விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது.  லென்ஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) அம்சத்துடன் கேமரா அமைப்பு உள்ளது.


இதற்காக பிரத்யேக 'ஆஸ்பெரிகல் பிரீமியம் லென்ஸ்' உள்ளது. இந்த வகை லென்ஸ்கள் மொபைல் போட்டோகிராஃபியில் படங்களை தெளிவாக்கப் பதிவுசெய்ய பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இது படத்தில் தேவையற்ற வண்ணங்களைக் குறைக்க உதவுகிறது. இந்த லென்ஸ்களை தயாரிப்பது கடினம், விலையும் அதிகம்.


50-மெகாபிக்சல் Sony IMX882 முதன்மை கேமரா, MediaTek Dimensity 7200 பிராசஸர் மூலம் இயங்கும் இந்த மொபைலின் விலை குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால் iQOO Z7 5G இன் விலையைப் பார்க்கும்போது, ​​iQOO Z9 ரூ.20,000-க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


iQOO நவம்பர் 2023 இல், iQOO 12 மொபைலை அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 2024 இல் iQOO Neo 9 Pro அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது iQOO Z9 5G March  2024 இல் அறிமுகமாக உள்ளது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Menu